பரனூர் ஸ்ரீராதிகாரமண பக்த கோலாஹலனுக்கு அத்யயனோத்ஸவத்தில் இன்று கோதா கல்யாணம் நடைபெற்றது. விடியற்காலையில் வழக்கம் போல் தனுர் மாத பூஜை உஞ்சவ்ருத்தியுடன் ஆரம்பித்தது. காலை 9 மணி அளவில் ஸ்ரீராதிகாரமணன் வஸந்த மண்டபத்தில் (4 கால் மண்டபத்தில்) எழுந்தருளினார். கோபர் திவ்யநாமமும் & கோபியர் திவ்யநாமமும் புதிய வைஷ்ணவ மண்டபத்திலும் நடைபெற்றது. பிறகு கல்யாண அஷ்டபதி, ஸ்ரீஸ்ரீஅண்ணா இயற்றிய கோதா சூர்ணிகை, லக்னாஷ்டகம், சோபனம் கோதா மாதவயோ எல்லாம் பாடி, ஸ்ரீபக்த கோலாஹலனுக்கு ஸ்ரீஸ்ரீ அண்ணா கோதா கல்யாணம் செய்து வைத்தார். மங்கள வாத்யம் முழங்க ஸ்ரீபக்த கோலாஹலன், பெருமாள் சன்னிதியை ப்ரதக்ஷணமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தபடியே சன்னதிக்கு உள்ளே எழுந்தருளினார். இவ்வாறு அத்யயனோத்ஸவம் இனிதே நிறைவுற்றது.